scorecardresearch

ராணுவ வீரர் படுகொலை; டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை.. உள்துறை அமைச்சரை சந்திக்கிறார்

அனுமதி இன்றி ஊர்வலம் சென்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உள்பட 3 ஆயிரம் பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tamil Nadu BJP President Annamalai Visits Delhi
தமிழ்நாடு பாஜக தலைவர் கு. அண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் 28 வயதான ராணுவ வீரர் பிரபு அடித்து கொல்லப்பட்டார். இதில் திமுக கவுன்சிலர் உள்பட சிலர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், ராணுவ வீரரின் கொலைக்கு நீதி கோரி பாஜக தரப்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ஊர்வலம் சென்ற பாஜகவினர், போர்நினைவு சின்னம் அருகே ராணுவ வீரர் பிரபுவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உள்பட 3 ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தில் கூட்டம் சேர்த்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடத்தியது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 42 பேர் இரு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் ராணுவ வீரர் பிரபு படுகொலை மற்றும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்து பேசுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu bjp president annamalai visits delhi

Best of Express