BJP Protest In Chennai Pattinappakkam : பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பு விஷயத்தில் குளறுபடி செய்த பஞ்சாப் அரசை கண்டித்து பாஜனவின் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் குஷ்பு ஆகியோர் தலைமையில் சென்னையில் கண்டன் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பஞ்சாப் மாநிலம பெரோஸ்பூரில், போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்குள்ள மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடி சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார். இதனால் பிரதமர் மோடியில் பாதுகாப்பு விஷயத்தில் அலச்சியத்துடன் செயல்பட்டதாக கூறி பஞ்சாப் மாநிலத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து அறிவிக்கை வெளியிட்டு வருகினறனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் இன்று பஞ்சாப் அரசை கண்டித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மற்றும் குஷ்பு ஆகியோர் தலைமையில், சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் 300-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட 300 பேரையும் கைது செய்ய போலீசார் முயன்ற நிலையில், காவல்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 300 பேரையும் போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி கட்சிக்கு அப்பார்பட்டவர், உலகில் வேறு எங்கிலும் இதுபோன்று நடந்ததில்லை. நாட்டின் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க பஞ்சாப் அரசு தவறிவிட்டது.
இந்த சம்பவம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்த சம்பவம் குறித்து ஆராய வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“