ஊடக விவாதங்களில் மீண்டும் பா.ஜ.க; எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 30 பேர் பட்டியல் வெளியீடு

ஊடக விவாதங்களில் மீண்டும் பங்கேற்க தமிழக பா.ஜ.க முடிவு; கரு.நாகராஜன் தலைமையில் 30 பேர் கொண்ட பட்டியலை அறிவித்தார் அண்ணாமலை

ஊடக விவாதங்களில் மீண்டும் பங்கேற்க தமிழக பா.ஜ.க முடிவு; கரு.நாகராஜன் தலைமையில் 30 பேர் கொண்ட பட்டியலை அறிவித்தார் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
TN BJP chief Annamalai yatra plan from Rameswaram Tamil News

ஊடக விவாதங்களில் மீண்டும் பங்கேற்க தமிழக பா.ஜ.க முடிவு; கரு.நாகராஜன் தலைமையில் 30 பேர் கொண்ட பட்டியலை அறிவித்தார் அண்ணாமலை

கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப் பிறகு ஊடக விவாதங்களில் நேரடியாக களமிறங்குகிறது தமிழக பா.ஜ.க. இதற்காக 30 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக ஊடகங்களில் விவாதம் நடத்தப்படுகிறது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். சில சமயம் இந்த விவாதங்கள் எல்லை கடந்து செல்வதைக் காணலாம். ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொள்வது, தனிநபர் தாக்குதல், மரியாதைக் குறைவான வார்த்தைகளால் பேசுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது. மேலும், விவாதங்களின்போது, ​​சில கட்சிகள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க ஊடகங்கள் சரியாக வாய்ப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

அந்த வகையில், ஊடக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லை என்று கூறி, ஊடக விவாதத்தில் பங்கேற்பதை தமிழக பா.ஜ.க நிறுத்தியது. கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க சார்பில் யாரும் ஊடக விவாதங்களில் கலந்துக் கொள்ளமாட்டார்கள் என்று அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக பா.ஜ.க மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், ஊடக பிரிவின் பார்வையாளராகவும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இதற்கான அறிவிப்பை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். மேலும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக பா.ஜ.க சார்பாக பங்கேற்கும் 30 பேர் கொண்ட மாநில நிர்வாகிகள் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

அதில், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, ஏ.ஜி சம்பத், இராம ஸ்ரீனிவாசன், பொன். பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், கார்த்தியாயினி, எஸ்.ஆர்.சேகர், வினோஜ்.பி. செல்வம், மீனாட்சி நித்ய சுந்தர், அஸ்வதமன், எஸ்.ஜி.சூர்யா, சி.நரசிம்மன், எஸ்.கே.கார்வேந்தன், ஆதவன், ஸ்ரீகாந்த் கருனேஷ், எம்.என்.ராஜா, மகாலக்‌ஷ்மி, அர்ஜூன மூர்த்தி, அமர் பிரசாத் ரெட்டி, ஷெல்வி தாமோதரன், குமரகுரு, மோகனப்பிரியா சரவணன் உள்ளிட்ட 30 நிர்வாகிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Bjp Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: