Advertisment

செருப்பைக் கழற்றி ஆளுனரை மக்கள் அடிப்பார்கள் என்பதா? உதயநிதியை டிஸ்மிஸ் செய்க: பா.ஜ.க

ஆளுநரை உதயநிதி ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசுவதா? தமிழக பா.ஜ.க கண்டனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Udhayanidhi and Narayanan

உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாராயணன் திருப்பதி

ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதலமைச்சரின் மகன் குடியரத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை தரம் தாழ்ந்து தரம் கெட்டு பேசுவதா?” என்று தமிழக பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும் ஆளுநரையும் கண்டித்து, தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுங்கள்; ஆர்.என்.ரவிக்கு உதயநிதி சவால்

உண்ணாவிரதத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன திமிரு, எவ்வளவு கொழுப்பு. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்ட கூட்டத்தில், அம்மாசியப்பன் என்பவர் ‘என் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். எனக்கு வசதி இருந்தது. இதனால் என்னால் கோச்சிங் செண்டருக்கு அனுப்ப முடிந்தது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்’ என்றார். ஆனால் இதை கேட்ட ஆளுநர். ‘ஐ நெவர் எவர்’ என்று சொல்கிறார். நான் ஆளுநரை கேட்கிறேன். நீங்கள் யார்? நீங்கள் என்ன மக்கள் பிரதிநிதியா? நீங்கள் ஒரு தபால்காரர் மட்டும்தான்?

நீங்கள் உங்கள் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுங்கள். தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிடுங்கள். தி.மு.க சார்பில் தலைவர்கள் யாரும் இல்லை. தி.மு.க.,வின் கடைக்கோடி தொண்டனை எதிர்த்து போட்டியிட்டு நீங்கள் வெற்றி பெறுங்கள். அப்படி நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கிறோம். உங்கள் சித்தாதங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், அவர்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள், என்று பேசினார்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு தமிழக பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநருக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு?.. உங்களுக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஏதோவொரு தொகுதியில் போட்டியிடுங்கள், உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்களை சந்தியுங்கள், உங்கள் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் சொல்லுங்கள். "செருப்பை கழட்டி அடிப்பாங்க" என்று தமிழக முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அநாகரீகமான அரசியலும் கூட. செருப்பால அடிப்பாங்க என்ற சொல் வன்மத்திற்குரியது, சட்டத்திற்கு புறம்பானது. என்று பேசுபவருக்கு தான் திமிர் மற்றும் கொழுப்பு?

ஜெயிக்கவில்லையென்றால் மக்கள் 'செருப்பால் அடிப்பார்கள்' என்று அர்த்தம் என்றால், தி.மு.க எண்ணற்ற கணக்கான தேர்தல்களில் தோல்வியுற்றது உலகத்திற்கே தெரியும். 1980, 1984, 1991 தேர்தல்களில் தோற்ற தி.மு.க.,வை தமிழக மக்கள் செருப்பால் அடித்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தந்தை கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிறார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்வியை இங்கே கேட்டு உங்கள் அளவிற்கு நான் தரம் தாழ்ந்து பேச மாட்டேன்.

2001, 2011, 2016 தேர்தல்களில் படு தோல்வியடைந்தீர்களே? மக்கள் தி.மு.க.,வை செருப்பால் அடித்தார்களா என்று பொருள் கொள்ள வேண்டுமா? 2014ம் ஆண்டு மக்களைவை தேர்தலில் மக்கள் தி.மு.க.,வை செருப்பால் அடித்து புறமுதுகிட்டு ஓடச்செய்தார்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

மக்களின் இவ்வளவு செருப்படியையும் பெற்று கொண்டு தொடர்ந்து தி.மு.க தேர்தல்களில் போட்டியிடுவது கேவலமில்லையா? வெட்கக்கேடு இல்லையா? மானக்கேடு இல்லையா?

ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதலமைச்சரின் மகன் குடியரத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை தரம் தாழ்ந்து தரம் கெட்டு 'செருப்பால் அடிப்பாங்க' என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதிர்ச்சியற்ற, அராஜகமான, அநாகரீகமான, மக்களை தூண்டி விடும் முறையில் பேசியுள்ள உதயநீதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி தரக்குறைவாக பேசிய அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பதோடு, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்,” இவ்வாறு நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Udhayanidhi Stalin Bjp Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment