அ.தி.மு.க உள்கட்சி பிரச்சனையைப் பற்றி பா.ஜ.க-வின் சார்பாக அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால், எந்த கட்சியினுடைய உட்கட்சி பிரச்சனைகளிலும் நாங்கள் தலையிடப் போவது கிடையாது. எங்கள் எண்ணமும் அது அல்ல. அதை தொடர்ந்து 18 மாதங்களாக பேசிக்கொண்டு வருகிறோம்.

ஆனால், ஈரோடு கிழக்கு தேர்தலைப் பொறுத்தவரை, அவருக்கு ஒரு நிலைப்பாடு எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாஜகவினுடைய அதிகாரபூர்வ நிலைப்பாடு என்பது எந்த நிலையிலும் மாறாதது. அதிமுக என்கிற ஜனநாயக கட்சி, அவர்களுக்குள்ளே நடக்கின்ற பிரச்சனைகளை சட்டரீதியாக சரிசெய்து கொள்வார்கள்.
நேற்று ஒன்றிய அதிமுக-வாக ஈரோடு தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக சந்தித்து பேசினோம். அக்கட்சியின் தொண்டர்கள் யாரை தலைவர் என்று சொல்கிறார்களோ,அவர்களோடு நம் கட்சி சார்பில் உரையாடுவது வழக்கமாகும்”, என்று கூறுகிறார்.