தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்.14ஆம் தேதி தி.மு.க. தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது, தி.மு.க. தலைவரும் மாநில முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு தி.மு.க. தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கப்படும் என ஆர்.எஸ். பாரதி எச்சரித்தார்.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீஸில், "திமுக சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர்களின் சொத்துப் பட்டியலை ரீலிஸ் செய்தபோது அண்ணாமலை, “மு.க. ஸ்டாலின் மீதான புகாரை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன்” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“