வருகிற சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, திருத்தணியில் இருந்து திருச்செந்துாரில் நிறைவடையும் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்கியது.
முன்னதாக, பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கில் ஆஜரானான தமிழக அரசு வழக்கறிஞர், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்க முற்பட்டஎல்.முருகன் உட்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினரை தமிழக காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில், தங்களின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாராணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கொரோனா பொது முடக்கநிலை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் டாஸ்மாக், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. 30 பேர் யாத்திரை செல்வதில் என்ன அபாயம் இருக்கப் போகிறது. எங்கள் தலைவருக்கு பாதுகாப்பு கோருகிறோம் என்று விசாரனனையில் பாஜக வாதிட்டது. அப்போது, குறிக்கிட்டு பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், " நீங்கள் பாதுகாப்பு கோரவில்லை, யாத்திரைக்கு அனுமதி கோரியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, " பொது அமைதிக்கு தொடர்புடையதால் வேல் யாத்திரையின் வழியை அதை நடத்தும் பாஜக கட்சியே தீர்மானித்துக் கொள்ள முடியாது. யாத்திரை டிச. 6.ம் தேதி முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த தேதியை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முருகன் கோயில்களே இல்லாத வழியில் யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது ஏன்? என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.
மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் அளித்த மனுவில் எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து, யாத்திரைக்கு அனுமதி கோரி புதிய மனு அளிப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்கையும் கேட்ட நீதிபதிபதிகள், வழக்கை வரும் பத்தாம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, "பாஜக நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தமிழக காவல் துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும்!! வேல் துள்ளி வருவதற்கான அனைத்து முயற்சிகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று எல். முருகன் தெரிவித்தார்.