scorecardresearch

அதிர்ச்சி.. பயிற்சியின் போது உயிரிழந்த இளம் பாடி பில்டர்.. பிரெட் சாப்பிட்டது காரணமா?

ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள கடலூர் சென்ற இளைஞர் அங்கு பயிற்சியின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி.. பயிற்சியின் போது உயிரிழந்த இளம் பாடி பில்டர்.. பிரெட் சாப்பிட்டது காரணமா?

கடலூர் மாவட்டம் வடலூர், விருத்தாசலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஜூனியர் ஆணழகன் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

70 கிலோ எடை பிரிவில் சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (21) என்பவர் கலந்து கொள்ள இருந்தார். போட்டிக்கு முன்னதாக அனைத்து போட்டியாளர்களும் வார்ம்-அப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவரும் ஈடுபட்டுள்ளார். பயிற்சி இடைவேளையில் ஹரிஹரன் பிரெட் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு விக்கல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். மண்டபத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பயிற்சி இடைவேளையில் அவர் சாப்பிட்ட பிரெட்டி துண்டு, பெரிய துண்டு பிரெட் தொண்டையில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள வந்த 21 வயதான இளைஞர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu bodybuilder dies as bread he had at workout break stuck in throat