காவிரி- குண்டாறு இணைப்பு, ஏழை குடும்பங்களுக்கு இன்சூரன்ஸ்: பட்ஜெட் ஹைலைட்ஸ்

TN Budget 2020 Analysis : அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா வசதி, மீனவர்களுக்கு இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட படகு, தூத்துக்குடி அருகே பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

By: Updated: February 14, 2020, 05:05:22 PM

Tamil Nadu Budget 2020 Highlights: அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா வசதி, மீனவர்களுக்கு இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட படகு, தூத்துக்குடி அருகே பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று ( பிப்ரவரி 14ம் தேதி) தாக்கல் செய்தது. துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது பத்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பட்ஜெட் 2020 : யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் ; வாசன் வரவேற்பு

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

பெண்கள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட நிர்பயா திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் ரூ. 75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

ஏழைக்குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.,யுடன் இணைந்து, அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தபட உள்ளது. இதன்மூலம், இயற்கை மரணம் அமைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2லட்சம் வரை இழப்பீடு; விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

ஆழ்கடல் மீனவர்களை தொடர்புகொள்ள இஸ்ரோ கண்டறிந்த டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்படும். 4997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் இந்த தகவல்தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.
மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்காகன சிறப்பு தொகுப்பு திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் ” தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்” அமைக்கப்படும்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடியில் மெகா உணவு பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் , கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகம் ரூ.49,000 கோடியில் அமைக்கப்படும் *ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையை அமல்படுத்த அனைத்து பஸ்களிலும் விரைவில் மின்னணு பயணச்சீட்டு முறை அமல்படுத்தப்படும்.

முத்திரைதாள் வரி 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைப்பு. ஒப்பந்தங்கள் தொடர்பான பதிவு கட்டணங்களும் 1 சதவீதத்தில் 0.25 சதவீதமாக குறைப்பு

ஈரோட்டில் மஞ்சள் மையம்,தென்காசியில் எலுமிச்சைமையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம்

ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்.

மேட்டூர் உபரி நீரை, சேலத்தில் வறண்ட பகுதிகளுக்கு மாற்றி விடும், சரபங்கா நீரேற்று பாசன திட்டத்தை செயல்படுத்த ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு – அவினாசி நீர்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நிலமெடுக்க ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்லணை கால்வாய் அமைப்பு பணிகள் ரூ.2,298 கோடியில் மேற்கொள்ளப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பருவகால மாற்ற தழுவர் திட்டத்தை செயல்படுத்த ரூ.105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில்,1364 நீர்பாசன பணிகள் ரூ.500 கோடியில் மேற்கெள்ளப்படும். கூவம், அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களையும் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களையும், சீரமைக்க ரூ.5,439.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu budget 2020 tamil nadu budget highlights tn budget highlights 2020

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X