Tamil Nadu Budget 2021 Updates: தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
இ-பட்ஜெட்
தமிழக சட்டசபையில் முதன் முறையாக காகிதமில்லா இ - பட்ஜெட்ஜை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும்; இதற்காக ₹433 கோடி ஒதுக்கீடு.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைகம் ₹150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ₹500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ₹6,607 கோடி நிதி ஒதுக்கீடு.
மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்.
நீதித்துறைக்கு ₹1713 கோடி ஒதுக்கீடு; பேரிடர் மேலாண்மை துறைக்கு ₹1,360 கோடி ஒதுக்கீடு.
காவல்துறைக்கு ₹8,930.29 கோடி; சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ₹4,807 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ₹80 கோடி, தொல்லியல் துறைக்கு ₹29 கோடி ஒதுக்கீடு.
நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
வேளாண் பட்ஜெட்
நாளை முதன் முறையாக, 2021 - 22ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:13 (IST) 13 Aug 2021தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வரவேற்பு
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் வரி ரூ.3 குறைக்கப்படும் என்ற தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பு ஏழை எளியோரின் சுமையை குறைக்கும் அரசின் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி முதல் உட்கட்டமைப்பு வரை வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
- 20:32 (IST) 13 Aug 2021தமிழக நிதிநிலை அறிக்கை: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை: “தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித்திட்டத்தின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக உயர்த்தப்படும்; மகளிருக்கான பேறுகால விடுமுறை ஓராண்டாக அதிகரிக்கப்படும்; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2756 கோடி கடன் தள்ளுபடி என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை செயல்படுத்தும் வகையில், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையில் ரூ.500 கோடியில் புதிய இயக்கம் உருவாக்கப்படும்; தமிழகத்தின் காடுகள் மற்றும் மரங்களின் அடர்த்தியை 33% ஆக உயர்த்தும் நோக்குடன் மிகப்பெரிய அளவில் மரம் வளர்க்கும் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் மொழி, இலக்கியங்கள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றுக்காகவும் பல திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வாகனங்கள் பூங்கா, திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது. 9 மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு, அந்தத் திட்டங்களுக்கு விரைந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ள நிலையில், அடித்தட்டு மக்களின் நலன் கருதி வாக்குறுதி அளித்தவாறு பெட்ரோல் விலையை மேலும் ரூ. 2 குறைக்க வேண்டும்; விவசாயிகள் பயன்படுத்தும் டீசல் விலையையும் அரசு குறைக்க வேண்டும்.
மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தகுதியுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு அதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்குதல், காலியிடங்களை நிரப்புதல் மூலம் 5 லட்சம் பேருக்கு புதிதாக அரசுப் பணிகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன; அவற்றை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகளில் 17,970 மெகாவாட் புதிய மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை இலக்கு வைத்து செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டும் அதற்கு அடுத்த சில ஆண்டுகளிலும் தொடங்கப்பட்ட 6220 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அடுத்த ஓராண்டிற்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவதற்கும், மின்சார வாரிய கடன்சுமையை குறைக்கவும் இது மிகவும் அவசியமாகும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவை கலந்த கலவையாக உள்ளது. தமிழக அரசு எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகளை புரிந்து கொள்ள முடிகிறது. இதே நிலை நீடித்தால் அதை மக்களால் தாங்க முடியாது. எனவே, நிதிச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டு நிதிநிலைமையை சீர்செய்யவும், மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை விரைவாக செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
- 20:31 (IST) 13 Aug 2021வாக்குறுதிகளை நிறைவேற்றும் வளர்ச்சிக்கான பட்ஜெட் - திருமாவளவன் வரவேற்பு
திமுக அரசின் முதல் பட்ஜெட்: வாக்குறுதிகளை நிறைவேற்றும் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். “பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை மீட்டு வளர்ச்சிப் பாதையில் செலுத்துகிற வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையைப் பாராட்டி வரவேற்கிறோம்! ” என்று தெரிவித்துள்ளார்.
- 19:58 (IST) 13 Aug 2021தமிழக நிதிநிலை அறிக்கை: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை: “தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித்திட்டத்தின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக உயர்த்தப்படும்; மகளிருக்கான பேறுகால விடுமுறை ஓராண்டாக அதிகரிக்கப்படும்; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2756 கோடி கடன் தள்ளுபடி என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை செயல்படுத்தும் வகையில், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையில் ரூ.500 கோடியில் புதிய இயக்கம் உருவாக்கப்படும்; தமிழகத்தின் காடுகள் மற்றும் மரங்களின் அடர்த்தியை 33% ஆக உயர்த்தும் நோக்குடன் மிகப்பெரிய அளவில் மரம் வளர்க்கும் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் மொழி, இலக்கியங்கள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றுக்காகவும் பல திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வாகனங்கள் பூங்கா, திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது. 9 மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு, அந்தத் திட்டங்களுக்கு விரைந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ள நிலையில், அடித்தட்டு மக்களின் நலன் கருதி வாக்குறுதி அளித்தவாறு பெட்ரோல் விலையை மேலும் ரூ. 2 குறைக்க வேண்டும்; விவசாயிகள் பயன்படுத்தும் டீசல் விலையையும் அரசு குறைக்க வேண்டும்.
மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தகுதியுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு அதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்குதல், காலியிடங்களை நிரப்புதல் மூலம் 5 லட்சம் பேருக்கு புதிதாக அரசுப் பணிகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன; அவற்றை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகளில் 17,970 மெகாவாட் புதிய மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை இலக்கு வைத்து செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டும் அதற்கு அடுத்த சில ஆண்டுகளிலும் தொடங்கப்பட்ட 6220 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அடுத்த ஓராண்டிற்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவதற்கும், மின்சார வாரிய கடன்சுமையை குறைக்கவும் இது மிகவும் அவசியமாகும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவை கலந்த கலவையாக உள்ளது. தமிழக அரசு எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகளை புரிந்து கொள்ள முடிகிறது. இதே நிலை நீடித்தால் அதை மக்களால் தாங்க முடியாது. எனவே, நிதிச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டு நிதிநிலைமையை சீர்செய்யவும், மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை விரைவாக செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
- 18:52 (IST) 13 Aug 2021தமிழ்நாட்டிற்கு தனியான கல்விக்கொள்கை - சு. வெங்கடேசன் எம்.பி. வரவேற்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், “ஒன்றிய அரசின் தாக்குதல் மையங்களின் கூர்முனைப் பகுதியாக கல்வி மாற்றாப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு தனியான கல்விக்கொள்கை வகுக்கப்படும் எனவும் அதற்காக வல்லுநர் குழு அமைக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு மிக முக்கிய வரவேற்புக்குரிய முடிவாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
- 17:06 (IST) 13 Aug 2021பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே - கமல்ஹாசன்
தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், தேர்தல் வாக்குறுதிக்கும், பட்ஜெட்டுக்கும் இடையே ஏராளமான வித்தியாசம் மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று கூறியுள்ளார்.
- 16:27 (IST) 13 Aug 2021அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
2021-22ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா மற்றும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுததினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் உடனிருந்தனர்.
- 16:18 (IST) 13 Aug 2021பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை - ஜெயக்குமார்
தமிழக பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிதிநிலை பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
- 15:59 (IST) 13 Aug 2021பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நாளை முதல் அமல்
தமிழக பட்ஜெட்டில பெட்ரோல டீசல் மீதான விலையில் ரூ 3 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலைக்குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
- 14:36 (IST) 13 Aug 2021பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.626 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
- 14:11 (IST) 13 Aug 2021புவியியல் புதைபடிவ பூங்கா
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.கோடி மதிப்பீட்டில் புவியியல் புதைபடிவ பூங்கா உருவாக்கப்பட உள்ளது என்று நிதியமைச்சர்பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மேலும், நந்தம்பாக்கத்தில் முதற்கட்டமாக ரூ.165 கோடி செலவில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- 13:32 (IST) 13 Aug 2021பட்ஜெட் ஹைலைட்ஸ்
கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டமாக தொடர்ந்து செயல்படும்.
பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் கல்வி முன்னேற்றத்திற்கு ரூ 1,884.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
எம்.ஜி.ஆர். மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 1725 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக ரூ. 2536 கோடி ஒதுக்கீடு
- 13:07 (IST) 13 Aug 2021நிறைவுற்றது பட்ஜெட் உரை
தன்னுடைய 3 மணி நேர பட்ஜெட் உரையை முடித்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். நாளை காலை மீண்டும் 10 மணிக்கு பேரவை துவங்கும் என்று அறிவிப்பு
- 13:04 (IST) 13 Aug 2021வில்லங்ச் சான்றிதழை இணையத்தில் பார்க்கலாம்
நிலங்களுக்கான வில்லங்ச் சான்றிதழை 1975ம் ஆண்டு வரை இணையம் மூலம் சரிபார்க்கலாம் என்ற வசதியை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்கலாம் என விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
- 12:41 (IST) 13 Aug 2021ரேஷன் அட்டையில் பெயரை மாற்ற வேண்டியதில்லை
குடும்ப தலைவிகளுக்கான ரூ. 1000 திட்டத்தில் பலன் அடைவதற்காக ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவர் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
- 12:39 (IST) 13 Aug 2021அரசு பணியாளர்கள் நலன்
பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் 3 லட்சம் ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் அரசு ஊழியர்களுக்கு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக மகப்பேறு விடுப்பு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மற்ற மாநிலங்களாஇப் போல் அல்லாமல், சரியான நேரத்திற்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வரும் ஏப்ரல் முதல் அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும்.
- 12:33 (IST) 13 Aug 2021ரூ. 3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கம்
விளையாட்டு வசதி இல்லாத சட்டமன்றங்களில் சிறு விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த ரூ. 3 கோடி ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் வழங்கப்படும். விளையாட்டு துறைக்கு ரூ. 225.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 12:30 (IST) 13 Aug 2021நிதி ஒதுக்கீடு விபரம்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விடுதிகளை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத்துறைக்கு 187.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மசூதி, தேவாலயங்களை புதுப்பிக்க ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்கள் உதவி சங்கத்திற்கு ரூ. 4.15 கோடியும் கிறித்துவ பெண்கள் உதவி சங்கத்திற்கு ரூ. 2.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 11:50 (IST) 13 Aug 2021குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது.
- 11:49 (IST) 13 Aug 2021குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது.
- 11:44 (IST) 13 Aug 2021புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள்
நடப்பாண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11:42 (IST) 13 Aug 2021பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 11:37 (IST) 13 Aug 2021மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.703கோடி
மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக ரூ.703கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 11:28 (IST) 13 Aug 2021சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி நிதி
சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ.4807.56 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
- 11:26 (IST) 13 Aug 2021காவல்துறைக்கு ரூ.8,930 கோடி ஒதுக்கீடு
தமிழக காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11:22 (IST) 13 Aug 2021உணவு மானியத்திற்கான நிதி உயர்வு
உணவு மானியத்திற்கான நிதி ரூ.8,437.57 கோடியாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
- 11:20 (IST) 13 Aug 2021நீர் தேக்க அளவை உயர்த்த நடவடிக்கை- நிதியமைச்சர்
மேட்டூர், அமராவதி, வைகை அணை நீர்தேக்க அளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும். நீர்வளத்துறையின் பணிகள் நவீன மயமாக்கப்படும். தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் மேம்படுத்தப்படும்
- 10:55 (IST) 13 Aug 2021நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10:53 (IST) 13 Aug 2021தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் பணிபுரிவோருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10:47 (IST) 13 Aug 2021தமிழக காவல்துறையில் 14,317 காலியிடங்கள் நிரப்பப்படும்
தமிழக காவல்துறையில் 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10:37 (IST) 13 Aug 2021தொல்லியல் ஆய்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு
தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10:35 (IST) 13 Aug 2021ஆண்டுதோறும் ஜூன் 3ல் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது
ஆண்டுதோறும் ஜூன் 3ல் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது மற்றும் ரூ.10லட்சம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
- 10:34 (IST) 13 Aug 2021ஆண்டுதோறும் ஜூன் 3ல் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது
ஆண்டுதோறும் ஜூன் 3ல் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது மற்றும் ரூ.10லட்சம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
- 10:29 (IST) 13 Aug 2021நிதி சிக்கலை சரிசெய்ய மூன்று ஆண்டுகள் ஆகும்
தமிழகத்தின் நிதிநிலை சிக்கலை சரிசெய்ய மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் ஒரே ஆண்டில் செய்து முடிக்க முடியாத அளவுக்கு பணி மிகக் கடுமையாக உள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.
- 10:24 (IST) 13 Aug 2021மின்னணு கொள்முதல் முறை- நிதியமைச்சர்
பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும் எனவும் அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
- 10:20 (IST) 13 Aug 20216 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட்
6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தாக்கல் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
- 10:19 (IST) 13 Aug 20216 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட்
6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தாக்கல் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
- 10:12 (IST) 13 Aug 2021இ-பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 10:11 (IST) 13 Aug 2021சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர்.பேச வாய்ப்பு தரவில்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
- 10:10 (IST) 13 Aug 2021சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர்.பேச வாய்ப்பு தரவில்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
- 10:04 (IST) 13 Aug 2021கணினி திரையை பார்த்து படிக்கும் சபாநாயகர்
தமிழக சட்டப்பேரவை அலுவல்களை கணினி திரையில் பார்த்து சபாநாயகர் அப்பாவு படித்து வருகிறார்.
- 10:01 (IST) 13 Aug 2021பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
- 09:53 (IST) 13 Aug 2021முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர்
இ -பட்ஜெட் தாக்கலுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து பெற்றார்.
- 09:50 (IST) 13 Aug 2021பட்ஜெட் தாக்கல்- முதலமைச்சர் ஸ்டாலின் வருகை
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய பேரவை நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்தடைந்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் கலைவாணம் அரங்கம் வந்துள்ளனர்.
- 09:47 (IST) 13 Aug 2021பட்ஜெட் தாக்கல்- முதலமைச்சர் ஸ்டாலின் வருகை
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய பேரவை நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்தடைந்தனர்.
- 09:46 (IST) 13 Aug 2021பட்ஜெட் தாக்கல்- முதலமைச்சர் ஸ்டாலின் வருகை
இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வந்தடைந்தார்.
- 09:45 (IST) 13 Aug 2021பட்ஜெட் தாக்கல்- முதலமைச்சர் ஸ்டாலின் வருகை
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய பேரவை நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்தடைந்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் கலைவாணம் அரங்கம் வந்துள்ளனர்.
- 08:56 (IST) 13 Aug 2021மின் கட்டணம்- எதிர்பார்ப்பு
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படுமா என இந்த பட்ஜெட்டில் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
- 08:56 (IST) 13 Aug 2021மின் கட்டணம்- எதிர்பார்ப்பு
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படுமா என இந்த பட்ஜெட்டில் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
- 08:56 (IST) 13 Aug 2021தமிழக பட்ஜெட் 2021- எதிர்பார்ப்பு என்ன?
திமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமான இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடுத்தரக் குடும்பங்களை அதிகளவில் பாதிக்கும் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் எனவும் இதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம் கிடைக்குமா..?
- 08:33 (IST) 13 Aug 2021முதல் முறையாக இ-பட்ஜெட்
தமிழகத்தில் முதல் முறையாக காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
கடன்சுமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் நிதிநிலை அறிக்கை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.