உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தப் பட்ஜெட்டில் 3 ஆம் பாலினத்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உயர் கல்வி பயில விரும்பும் மூன்றாம் பாலின மாணவ, மாணவிகளின் முழு கல்விச் செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்களில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“