தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடக்கிறது. வாக்கு முடிவுகள் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
Advertisment
விக்கிரவாண்டியில் அதிமுக, திமுக நேருக்கு நேர் களம் காணுகின்றன. நாங்குநேரியில் அதிமுகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும் களம் காணுகின்றன. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த இரண்டு தொகுதிகளிலும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம்போல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். திமுக போட்ட வழக்குகளால்தான் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரசின் குறைகளை ஸ்டாலின் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் ஆடி, அதிமுகவுக்கு வாக்கு சேகரித்துள்ளார்.
அதேபோல், அமைச்சர் ஜெயக்குமார், வேகாத வெயிலில் சென்று வாக்கு சேகரித்த போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் மண்வெட்டியை வாங்கி தானே மண்ணை அள்ளத் தொடங்கினார். ஃபார்மாலிட்டிக்காக என்றாலும், நான்கு முறை மண் அள்ளிவதற்குள் அமைச்சர் மூச்சிரைத்துப் போனார்.
அடங்கப்பா என்று முடியல மோடில் அமைச்சர் ரிலாக்ஸ் செய்ய, சுற்றியிருந்த அனைவரும் சிரிக்க, அவரும் சிந்தாமல் சிதறாமல் சிரித்து வைத்துவிட கலகலத்தது அந்த ஏரியா.