Advertisment

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்; மு.க. ஸ்டாலின் ஆதரவில் காங்கிரஸ் வெற்றி

இளங்கோவனின் மகனும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா, ஜனவரி 4-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu bypoll Congress set to cruise to Erode East win aided by Stalin govt image

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதே, அதிமுகவின் கே.எஸ்.தென்னரசுவை விட 21,137 வாக்குகள் முன்னிலை பெற்றார்.
இளங்கோவனின் மகனும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா, ஜனவரி 4-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

Advertisment

77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவனுக்கும், தென்னரசுவுக்கும் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் எஸ் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

வெற்றி வித்தியாசம் 30,000க்கு மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சி, இளங்கோவனின் சொந்தத் தூய்மையான இமேஜ், பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற பிரபலமான திட்டங்கள் உட்பட பல்வேறு காரணிகள் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு உதவியுள்ளன.

ஸ்டாலின் அரசின் நேர்மறையான இமேஜ் தனக்கு உதவியது என்றும் இளங்கோவன் கூறினார். “இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டது. இது முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்.
தேர்தல் வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை 20 மாதங்களில் நிறைவேற்றிவிட்டார். எங்கள் தலைவர் ராகுல் காந்தி மீது மக்கள் எவ்வளவு அன்பும் பாசமும் கொண்டுள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு” என்று காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஈரோடு கிழக்கில் 2.26 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் 50,000 பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இது, அதிமுக-பாஜக கூட்டணிக்கு சரிவுக்கு முக்கியமான காரணியாகும். இதற்கிடையில், இடதுசாரி மற்றும் தலித் கட்சிகளின் கூட்டணி இளங்கோவனுக்குப் பின்னால் திரண்டது, காங்கிரஸ் தலைவருக்கு உற்சாகத்தை அளித்தது.

பிரச்சார காலத்தில் திமுகவின் அனைத்து கேபினட் அமைச்சர்களும், அதிமுகவின் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் அடிமட்ட அளவில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம், ஸ்டாலின் தனது பிரச்சார உரையின் போது, திராவிட இயக்க சின்னமான பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் தந்தை ஈ.வி.கே.சம்பத்தின் நினைவுகளையும் நினைவு கூர்ந்தார்.

அப்போது, சம்பத்தின் மகனுக்கு ஓட்டு கேட்க கலைஞர் (மறைந்த கருணாநிதி) மகன் இங்கு வந்துள்ளேன்” என்றார். பிப்ரவரி 27 அன்று நடந்த இடைத்தேர்தலில் தகுதியான வாக்காளர்களில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
அப்போது இது விவாத பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Evks Elangovan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment