இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக 26 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், மற்றும் ரவிச்சந்திரன் ஆவார்கள்.
பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை எப்போது ?
அவர்களின் விடுதலை தொடர்பாக பலமுறை உச்ச நீதிமன்றம் கூறியிருந்தும் பல்வேறு காரணங்களால் அவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
இந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றம் கடந்த 6ம் தேதி “ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கலாம்” என்று கூறியது.
தமிழகத்தைச் சார்ந்த கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக அரசு மிக விரையில் அமைச்சரவையைக் கூட்டி இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
அதன் பேரில் நாளை மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது. இதில் 7 விடுதலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவினை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 2014ம் ஆண்டு இப்படி ஒரு தீர்ப்பு வெளியான போது, அவர்களை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.