scorecardresearch

தொழில் துறை அமைச்சராக டி.ஆர்.பி ராஜா: பி.டி.ஆர், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் இலாகா மாற்றம்

புதியதாக அமைச்சர் பொறுப்பேற்ற டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில் துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TRB Rajaa
Tamil News Updates

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (மே 11) நடைபெற்ற விழாவில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு தொழில் துறை அமைச்சர் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களின் இலாகாவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டுள்ளது.

புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, பால் வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக உள்ள மு.பெ சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பால் வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தி.மு.க அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டில் இது 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வளர்ச்சி மற்றும் அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு, சலசலப்புக்கு இடையே இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி ட்விட்டரில் ‘IstandwithPTR’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டு ஆனது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu cabinet reshuffle finance minister ptr moved to it ministry