Tamil Nadu Cement Corporation – CAG report Tamil News: தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் (டான்செம்) சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், 8 சுரங்கங்களை சட்டவிரோதமாக இயக்கியதாக சி.ஏ.ஜி (தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா) அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
நேற்று வெள்ளிக் கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில், சிமென்ட் உற்பத்தி செய்யத் தேவைப்படும் மூலப்பொருளான சுண்ணாம்புக் கல் சிவப்பு வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்தக் கல்லை தோண்டி எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி (EC) முன்நிபந்தனை தேவை என்றும் கூறியது.

“மாநில அரசிடம் இருந்து 9 சுரங்கங்களை குத்தகைக்கு வாங்கிய டான்செம், அரியலூர் மாவட்டத்தில் ஒரே ஒரு சுரங்கத்திற்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் டான்செம் (TANCEM) சுண்ணாம்புக் கல்லை வெட்டி எடுக்கக் கூடாது. இதன் காரணமாக, 119.6 கோடி அபராதமும் ராயல்டியும் செலுத்த வேண்டியதாயிற்று.” என்றும் கூறியுள்ளது.
2016 மற்றும் 2021 க்கு இடையில், 2016-17 மற்றும் 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டுமே டான்செம் லாபம் ஈட்டியதாகவும், இந்த லாபத்துடன் ஒப்பிடுகையில், நஷ்டம் அதிகம் என்றும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil