செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை அம்பலப்படுத்தியதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். தமிழக பாஜக நிர்வாகியான இவர், சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்,மனநலம் சரியில்லாதவர் என்று கலேஷா என்பவரிடம், கஞ்சா எங்கிருந்து கிடைத்தது யார் விற்பனை செய்தார்கள் என்று கேட்கிறார். அதற்கு தான் பஷீரிடம் இருந்து கஞ்சா பெற்றதாகவும், அதன் விலை ரூ 700 என்றும் கூறுகிறார்.
மேலும் குருபாய் என்ற ஷெரிப் அப்பகுதியில் மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனை செய்து வருவதை தனசேகர் பார்த்துள்ளார். இதனிடையே தனசேகரின் வீடியோ சமூகலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், ஆத்திரமடைந்த குருபாயின் மகன் அகமது பாஷா போலீசில் புகார் அளித்து உறவினர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இந்த சாலை மறியலின்போது தனசேகர் காரில் சென்று கொண்டிருந்தபோது, கானாகோயில் கோட்டை அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர், ரத்தத்தில் நனைந்த ஆடைகளுடன் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக தனசேகர் அளித்த புகாரின்பேரில் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆறு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனசேகர் தாக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில்,
கஞ்சா விற்பவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து அவர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட @BJP4TamilNadu நிர்வாகி திரு தனசேகர் மற்றும் அவரது குடும்பத்தாரை சற்று நேரத்திற்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தித்து அவரோடு தோளோடு தோள் நிற்பேன் என்ற வாக்குறுதியை அளித்தேன். pic.twitter.com/OCq4G2Iq0l
— K.Annamalai (@annamalai_k) December 18, 2022
கஞ்சா விற்பவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து அவர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி திரு தனசேகர் மற்றும் அவரது குடும்பத்தாரை சற்று நேரத்திற்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தித்து அவரோடு தோளோடு தோள் நிற்பேன் என்ற வாக்குறுதியை அளித்தேன். மேலும் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“