Tamilnadu News Update For Republic Day : கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக குடியரசு தின விழாவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில குடியரசு தின விழாவை முன்னிட்ட நடைபெவிருந்த கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கடுமையாக கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டிலும் இதே நிலை தொடர்ந்து வருகிறது.
பொதுவாக குடியரசு தின விழாவில், சென்னை மெரினா கடற்கரையில், காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் ஆளுநர் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைப்பார். அதனைத் தொடர்ந்து வீர தீர செயல்கள் புரிந்த காவலர்களுக்கு விருதுகள் வழக்கப்படும். அதன்பிறகு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகாக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தேசியகொடியை ஏற்றிவைக்கிறார். ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள அனுப்பப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த அலங்கார ஊர்திகள் தமிழக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி டெல்லி அணிவகுப்பில் பங்கேற்க சென்ற வீரமங்கை வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட அலங்கார ஊாதிகள் உட்பட 4 ஊர்திகள் மட்டுமே அணிவகுப்பில் கலந்துகொள்ளும் என்று கூறகப்பட்டுள்ளது. இதில், மங்கள இசை – பரதநாட்டியம், சுதேசி கப்பல் வேலூர் கோட்டை, சுதந்திரத்திற்காக பாடுபட்ட வ.உ.சி செக்கு இழுக்கும் நிகழ்வு, பாரதிதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி, மற்றும் விடுதலைப்பேரில் பங்கேற்ற பலரின் சிலைகளுடக் சுதேசி கப்பல் இடம்பெறுகிறது
பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இரட்டை மலை சீனிவாசன், வ.வே.சு அய்யர், வாஞ்சிநாதன், தீரன் சின்மலை, திருப்பூர் குமரன்,காமராஜர் காயிதே மிலத் ஜோசப் சி குமரப்பா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் 4-வது அணிவகுப்பில் இடம்பெற உள்ளன. மத்திய அரசின் சார்பில், தரைப்படை, கடற்படை. விமானப்படை, ஆகியவற்றின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக அலங்கார ஊார்தி அணிவகுப்பு நடைபெற உள்ளது.
காவலர்கள் அணிவகுப்பு முடிந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி 35 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு மணி நேரம் நடைபெறும் இந்நிகழ்ச்சி தற்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் 35 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “