பாடகராக மாறிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ- இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிக்க புதிய முயற்சி
எனது தாய்மொழியான ஒடியாவிலும், இந்தியிலும் பாடல்கள் பாடுவேன். அவற்றில் சிலவற்றை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளேன். ஆனால், முறையான ஸ்டுடியோ அமைப்பில் நான் பாடுவது இதுவே முதல் முறை.
தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) சத்யபிரதா சாஹூவில் உள்ள நல்ல பாடகருக்கு இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்க முடியாது. அதுவும் ஒரு உன்னதமான நோக்கத்திற்காக.
Advertisment
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான புரோமோஷனல் வீடியோவில், சாஹூ, இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் பாடுவதைக் காணலாம்.
நான் ஆரம்பத்தில் பாடுவதற்கு திட்டமிடவில்லை. நாங்கள் விழிப்புணர்வு வீடியோ உருவாக்கும்போதும், மாற்றங்களைப் பரிந்துரைக்கும்போதும் நான் ஸ்டுடியோவைப் பார்வையிட்டேன். அப்போதுதான் அந்த யோசனை தோன்றியது. நீங்களும் பாடலாம் என்று இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சொன்னார், இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக சாஹூ கூறினார்.
’நான் ஒரு அமெச்சூர் பாடகர். எனக்கு பாடுவது பிடிக்கும். எனது தாய்மொழியான ஒடியாவிலும், இந்தியிலும் பாடல்கள் பாடுவேன். அவற்றில் சிலவற்றை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளேன். ஆனால், முறையான ஸ்டுடியோ அமைப்பில் நான் பாடுவது இதுவே முதல் முறை.
எனது கருத்துக்கள் தமிழில் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் உள்ளீடுகளைக் கொடுத்தேன்... பிறகு, பாடல் வரிகள் தயாராகிவிட்டன, நான் பாடினேன்,’ என்றார் சாஹூ.
இளைஞர்கள் தங்கள் கடமையைச் செய்து வாக்குப்பதிவு வாக்களித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மாற வேண்டும், பணத்தை வாங்காமல், மனசாட்சியுடன் வாக்களிக்குமாறு பாடல் வரிகள் அழைப்பு விடுக்கிறது.
இந்த பாடல்ceotamilnadu என்ற யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
சாஹூ வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.
2019 வாக்கெடுப்பின் போது தேசிய வாக்குப்பதிவு சராசரி 67% ஆகவும், தமிழ்நாட்டில் 73% முதல் 74% சதவீதமாகவும் இருந்தது. எங்களின் இலக்கு 100%. ஆனால் 75%முதல் 80%வரை வாக்குப்பதிவு இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம், என்றார் சாஹூ.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“