Tamil Nadu chief minister and other ministers visiting foreign countries : கடந்த மாதம் 28ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து லண்டன் சென்றடைந்தார். அங்கு கிங்க்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார் அவர். தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகளை தமிழகத்தில் உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து முதலீட்டாளர்களிடம் பேசினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் அவருடன் பயணம் மேற்கொண்டனர்.
தற்போது லண்டனில் இருக்கும் முதலமைச்சர் இன்று இரவு அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பின்பு அங்கிருந்து திரும்பும் போது அமீரகம் சென்று முதலீட்டாளர்களிடம் பேச இருக்கிறார் முதல்வர். தற்போது முதலமைச்சரின் இந்த பயணத்தில் மேலும் புதிய அமைச்சர்கள் இணைந்து கொள்ள இருக்கின்றனர். ஆர்.பி. உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் அமெரிக்க கூட்டங்களில் பங்கேற்பதற்காக அமெரிக்கா விரைந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/EDPA9QfUEAEh8b4-768x1024.jpg)
வெளிநாடுகள் செல்லும் அமைச்சர்கள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் சென்ற அதே நாளில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சுவீடன் நாட்டிற்கு சென்றார். அங்கு கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்டறிந்து தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர். அங்கிருந்து அவர் ஃபின்லாந்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/EDI2ZzAU0AI22ZI-1024x768.jpg)
செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிஷியஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
மொரிஷியஸில் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கொடுத்த கடம்பூர் ராஜூ
தொழிலாளர் துறை அமைச்சர் நிலோஃபர் கஃபீல் சமீபமாக ரஷ்யாவில் நடைபெற்றா சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பினார். ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற சர்வதேச வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு கண்காட்சியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் நிலோஃபர் கஃபீல்
ரஷ்யாவில் அமைச்சர் நிலோஃபர் கஃபீல் (PC : @DrNiloferKafeel)
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசுமுறை பயணமாக இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் அங்கிருந்து தாய்லாந்து மற்றும் சிங்கபூர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்நாடுகளில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறை போன்ற முக்கிய அம்சங்களை அறிந்து தமிழகத்தில் செயல்படுத்த உள்ளனர்.
மேலும் படிக்க : வெளிநாடு சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி… மூன்று நாடுகளில் முதலீட்டார்களை சந்தித்து பேச திட்டம்
வெளிநாட்டு டூர் அமைச்சர்கள் பட்டியல்
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
- ராஜேந்திர பாலாஜி
- விஜயபாஸ்கர்
- ஆர்.பி.உதயகுமார்
- உடுமலை ராதாகிருஷ்ணன்
- கடம்பூர் ராஜூ
- திண்டுக்கல் சீனிவாசன்
- நிலோஃபர் கஃபீல் (தற்போது தமிழகம் திரும்பியுள்ளார்)
- செங்கோட்டையன்
வெளிநாட்டு டூர் செல்லாத அமைச்சர்கள் பட்டியல்
- ஓ. பன்னீர் செல்வம்
- மாஃபா பாண்டியராஜன்
- செல்லூர் கே.ராஜூ
- பி.தங்கமணி
- எஸ்.பி.வேலுமணி
- ஜெயக்குமார்
- சி.வி.சண்முகம்
- கே.பி. அன்பழகன்
- எம்.சி.சம்பத்
- கே.சி.கருப்பணன்
- ஆர்.காமராஜ்
- துரைக்கண்ணு
- வெல்லமண்டி என்.நடராஜன்
- கே.சி.வீரமணி
- ஜி.பாஸ்கரன்
- எஸ். வளர்மதி
- வி.சரோஜா
- ஓ.எஸ். மணியன்
- வி.எம்.ராஜலட்சுமி
- சேவூர் ராமச்சந்திரன்
- விஜயபாஸ்கர்
- பெஞ்சமின்