Tamil Nadu chief minister edappadi palanisamy returned home : ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீட்டினை ஈர்ப்பதற்காக லண்டன் பயணித்தார் எடப்பாடி பழனிசாமி. அங்கிருந்து அவர் பின்பு அமெரிக்கா மற்றும் துபாயில் இருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களையும் சந்தித்து பேசினார். 13 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.
சென்னை விமான நிலையத்தில் கோலாகலமாக வரவேற்பினை அளித்தனர் அதிமுகவினர். அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டில் இருந்து 8835 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினார். கூடிய விரைவில் அந்த முதலீடுகளால் தமிழக இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இந்த பயணித்திப் மூலமாக கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகம் வர உள்ளன என்றும், கிங்ஸ் மருத்துவமனையின் கிளை சென்னையில் துவங்கப்பட உள்ளது என்றும், இந்த 3 நாடுகள் பயணத்தின் இறுதியில் 40க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும், யாதும் ஊரே என்ற திட்டம் துவங்கப்பட்டது என்றும் முதல்வர் அறிவித்தார்.
Advertisment
Advertisements
வெளிநாட்டில் பல்வேறு விதமான தொழில் முனைவோர்களை சந்திக்கின்றோம். முதலீட்டினை ஈர்ப்பதற்காக அங்கே சென்றிருக்க பட்சத்தில் அவர்கள் உடையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரின் ஆடை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார் எடப்பாடி பழனிசாமி. வெளிநாடு வாழ் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது என்று கூறிய அவர், தமிழகத்தில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் கூறினார்.
இந்த புதிய திட்டங்கள் மூலமாக தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கும், எரிச்சல் மற்றும் பொறாமையின் காரணமாகவே பலரும் எதிர்த்து குரல் எழுப்புகின்றனர் என்றும் அவர் கூறினார். இந்த வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றும், நீர் மேலாண்மை குறித்து அறிந்து வர விரைவில் இஸ்ரோ பயணிக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியன், எம்.எல்.ஏக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். முதல்வரை வரவேற்க ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவருடைய மகன் ஓ.பி. ரவிந்திரநாத் குமார் ஆகியோர் விமான நிலையம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பத்தில் பின்னிப் பெடலெடுக்கும் 103 வயது தாத்தா