/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-17T174644.987.jpg)
tamil nadu chief minister health insurance scheme, chief minister public health insurance scheme, கொரோனா வைரஸ் சிகிச்சை, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை, முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், coronavirus treatment, covid-19 treatment in private hospital, chennai high court, tamil nadu govt clarified in chennai high court, Chief Minister's Comprehensive Health Insurance Scheme
தனியார் மருத்துவமனைகளில், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்... கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும்... கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா?
அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா?
அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதேபோல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் 44 அரசு ஆய்வகங்களிலும், 33 தனியார் ஆய்வகங்களிலும் என 77 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி 6 லட்சத்து 55 ஆயிரத்து 257 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 38 ஆயிரத்து 716 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயித்துள்ளதாகவும், தீவிரமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு 15,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா சிகிச்சைக்கு 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கி வைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனியார் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக தமிழக அரசு தான் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, விசாரணையை, ஜூன் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.