வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஐந்து கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (டிசம்பர் 2 அன்று) வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் நான்கு சன்னதிகளின் வளாகங்களில் அமைத்திருக்கும் மையங்களை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரியம்மன் கோயில் (ஈரோடு அருகே பண்ணாரி), மதுரை கள்ளழகர் கோயில் மற்றும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயில் ஆகிய இடங்களில் இந்த மருத்துவ மையங்கள் துவக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவ மையங்கள் கடந்த ஆண்டு 10 கோவில்களில் அமைக்கப்பட்டது. தற்போது மேலும் 5 கோவில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் கோவில்களில் இந்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தலைமைச் செயலர் வே.இறை அன்பு மற்றும் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil