Tamil Nadu chief minister ordered to issue epass to all : கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர் திரும்ப மிகவும் சிரத்தை எடுத்துவருகின்றனர். மேலும் நம்முடைய நாட்டிலேயே பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்புவது இன்னும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. பெருநகரங்களில் வேலை செய்யும் மக்கள் ஈ-பாஸை பெற்று பின்பு தான் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடியும்.
மேலும் படிக்க : என் உயிரை காப்பாற்றியது இஸ்லாமியர்கள் தான்… பெங்களூர் சர்ச்சை கருத்திட்டவர் தாயார் உருக்கம்!
தமிழக அரசு அறிவித்த ஈ-பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற 17ம் தேதி ஆதார் மற்றும் ரேசன் கார்டுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஈ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையற்ற பயணத்தை தவிர்த்து தேவை இருப்பவர்கள் மட்டும் ஈ-பாஸிற்கு விண்ணப்பிக்கவும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/08/6addd3b1-a643-40b4-bccd-5cf3a543480d-702x1024.jpg)
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சில காலத்திற்கு மண்டலத்திற்குள் மட்டுமே பயணிக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்ததன் விளைவாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் நபர்களுக்கு இ-பாஸ் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டது. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது “பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக” அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஈ-பாஸ் முறையை முற்றிலும் கைவிட வேண்டும். இது மக்களுக்கு பெரும் சிக்கலை தரும் ஒன்றாக இருக்கிறது என்று எதிர்கட்சியினர் தொடர்ந்து ஈ-பாஸ் நடைமுறைக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil