தமிழ்நாடு தலைமைச்செயலாளராக உள்ள இறையன்பு தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு விண்ணப்பித்து உள்ளார்.
அந்தப் பொறுப்பிற்கு அவர் எப்போது வேண்டுமென்றாலும் தேர்வாக வாய்ப்புள்ளதாக மேல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ள நபர்களின் பெயர் பட்டியரை தேர்வுக்குழு அளிக்கும்.
இதையடுத்து இதில், தகுதியானவர்கள் பட்டியலை முதல் அமைச்சர், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கொண்ட குழு தேர்வு செய்வார்கள்.
இந்தப் பொறுப்புக்கு இறையன்பு ஐஏஎஸ் தேர்வு செய்யப்படும் போது, அவர் தலைமை செயலர் பதவியில் இருந்து முன்கூட்டியே விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், இறையன்பு ஐஏஎஸ் ஒய்வு காலமான ஜீன் 16 ஆம் தேதிக்கு முன்னதாகவே ஒய்வில் செல்ல முடிவெடுத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இறையன்பு ஐஏஎஸ்க்கு பின்னர் தலைமை செயலர் பதவிக்கு, ஹன்ஸ்ராஜ் வர்மா, சோமநாதன், விக்ரம் கபூர், அதுல்ய மிஸ்ரா, ஜிதேந்திரநாத் ஸ்வெயின், எஸ். கிருஷ்ணன், ராஜாராமன், எஸ்.கே.பிரபாகர், சந்தீப் சக்சேனா, நசிமுதீன், ஷிவ்தாஸ் மீனா, முருகானந்தம் உள்ளிட்ட பெயர்கள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/