முதல்வர் பயணித்த அதே விமானத்தில் சென்ற முக ஸ்டாலின்! ஆனால்?

தமிழக முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது இது தான் முதன்முறை.

Tamil Nadu CM edappadi Palanisamy and DMK Leader MK Stalin traveled in the same flight

Tamil Nadu CM Edappadi Palanisamy and DMK Leader MK Stalin traveled in the same flight : இன்று முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளை ஒட்டி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் ஏற்பாடுகள் பலமாக இருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அங்கே வருகை புரிவார்கள் என்பதால் கொண்டாட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சொல்லவே தேவையில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர் இந்நிகழ்வுகளில் பங்கேற்க என்பது தான் இந்த ஆண்டுக்கான ஹைலைட்.

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில்,  ஸ்டாலின் முதல் வரிசையில் வலப்புற ஜன்னலோரம் அமர்ந்திருக்க, இடப்புற ஜன்னலோரம் முதல்வர் பழனிசாமி அமர்ந்து பயணித்துள்ளார்கள். முதல்வரின் தாயார் இறந்த பிறகு மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து பேசியது தமிழக அரசின் பண்பட்ட மரியாதையை காட்டியது. அதே போன்று இந்த நேரத்திலும் பேசிக் கொள்வார்களா என்று எதிர்பார்த்தால், ஒருவரை ஒருவர் முகம் கொடுத்துக்கூட பார்க்கவில்லையாம்.

மு.க.ஸ்டாலினுடன் டி.கே.எஸ் இளங்கோவன், பூங்கோதை ஆகியோர் பயணிக்க முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காமராஜுடன் பயணத்தை மேற்கொண்டார்கள். கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக விமானத்தில் பயணித்த அனைவருமே முகக்கவசம், ஷீல்ட் அணிந்திருந்ததால் பேச வாய்ப்பு கிட்டவில்லை என்கிறது அரசியல்வட்டாரம். ஆனால், கேரளாவில்கூட அடிக்கடி பார்க்க கூடிய ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர் ஒன்றாக பயணிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தமிழக முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒரே விமானத்தில் பயணிப்பது இது தான் முதன்முறை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu cm edappadi palanisamy and dmk leader mk stalin traveled in the same flight

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express