Chennai Tamil News: சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் பேஸ்- 2 பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை மெட்ரோ பேஸ்- 2 திட்டத்தின் கீழ் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கு மூன்று மெட்ரோ ரயில் பாதைகளை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மாதவரம் பால் காலனியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
128 நிலையங்களைக் கொண்ட இந்த பேஸ்-2 திட்டத்தின் விரிவாக்கத்தில், நடைபாதை 3 - மாதவரத்திலிருந்து சிப்காட் வரை (45.8 கி.மீ.), நடைபாதை 4 - கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை (26.1 கி.மீ.) மற்றும் நடைபாதை 5 - மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ.) என்று கட்டப்படுகிறது.
இந்த திட்டம் மத்திய அரசின் செயலாக்கம் மற்றும் ஒப்புதலின் கீழ் உள்ளது, எனவே இதனின் மதிப்பீடு ரூ.63,246 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இக்கட்டுமான பணிகள் 2026 இறுதிக்குள் முடிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ பேஸ் - 2 திட்டத்திற்கான நிதியுதவி, அதாவது 52.01 கிலோமீட்டர் (மாதவரம் - சோழிங்கநல்லூர் நடைபாதை 3 மற்றும் மாதவரம் - சிஎம்பிடி நடைபாதை 5-இன் கட்டுமானத்திற்கு) ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) மாநிலத் துறை திட்டமாக இணைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 66.89 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) மற்றும் நியூ டெவலப்மென்ட் வங்கி (என்டிபி) ஆகியவற்றின் மூலம் நிதியளிக்க ஒப்புதல் பெற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil