தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனிடம் டெலிபோனில் நலம் விசாரித்தார்.
மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் ஆளுநர் இல. கணேசனுக்கு கடந்த சில தினங்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
சென்னை தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.4) இல. கணேசனுடன் டெலிபோனில் பேசியுள்ளார்.
இது குறித்து மு.க. ஸ்டாலின் ட்விட்டரில், “உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil