மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து; பரபரப்பு தகவல்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன் புதுப்பட்டியில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்லவிருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன் புதுப்பட்டியில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்லவிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin 2303

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள், அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை உள்ளிட்ட சம்பவங்களால் திமுக அரசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்தால் இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கூட்டணிக் கட்சியில் உள்ள சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த பரபரப்பான சூழலில் புதுக்கோட்டை மாவட்டம் பொன் புதுப்பட்டியில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம்  புதுக்கோட்டை ஜெ.ஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திடீரென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி புதுக்கோட்டை வரும் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் சில இடங்களில் கருப்பு  கொடி காட்டவும் சிலர் திட்டமிட்டதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதால் முதல்வரின் பயணத்திட்டம்  ரத்து செய்யப்பட்டது.

மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி தொடர்பான விவகாரங்களில் ஆறுதல் கூட சொல்ல வர முடியாத முதல்வர் புதுக்கோட்டையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தும் என்றும், புதுக்கோட்டையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பிரச்சினைகளை கிளப்ப இருப்பதாக வந்த தகவலால் தமிழக முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. 
முன்னதாக, சட்டத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான எஸ்.ரகுபதியின் பேரன் டாக்டர் எஸ்.நாச்சியப்பன் ரகுபதி - டாக்டர் பி.அழகம்மை திருமணம் புதுக்கோட்டையை அடுத்த புதுப்பட்டியில் இன்று காலை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு விழா இன்று மாலை 6 மணி அளவில் புதுக்கோட்டை ஜெ.ஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி ஆர் பாலு, அமைச்சர்கள் கே.என் நேரு உள்ளிட்ட திமுகவின் முக்கிய பிரபலங்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: