scorecardresearch

“நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமைந்தது”- ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின் பெருமிதம்

“விரைவில் நாம் சந்திக்க இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது”- முதல்வர் மு.க.ஸ்டாலின்

“நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமைந்தது”- ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின் பெருமிதம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இதைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றதால் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் கொண்டாடி வந்தனர்.

இதைப்பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இதைத்தேர்தலில், மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், வேட்பாளராக நின்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு, மிகப்பெரிய வரலாற்றில் இடம்பெறக்கூடிய அளவிற்கான வெற்றியை பெற்றுத்தந்த அந்த தொகுதியினுடைய வாக்காளர்களுக்கு, திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டது, திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்பதுதான்.

ஆக, திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்போடு நடத்திட வேண்டும் என்று மக்கள் தங்களது மிகப்பெரிய ஆதரவை இந்த இடைத்தேர்தலில் தந்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், இந்த இடைத்தேர்தலை பொறுத்த வரைக்கும் தன்னையே மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரைப் போல் பேசிய பேச்சுக்கு, மக்கள் ஒரு நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள்.

விரைவில் நாம் சந்திக்க இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது”, என்று கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu cm mk stalin press meet after erode bypoll election results

Best of Express