கள்ளச்சாராயம் காரணமாக தமிழகத்தில் அதிகரிக்கும் மரணங்களை கண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். இதையடுத்து தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"கள்ளச்சாராயத்தை தடுக்க மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுவிலக்கு குறித்து தகவலளிக்க 10581 என்ற எண் பயன்பாட்டில் உள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளின் வீடுகளில் வாட்ஸ்-அப் எண்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நியமிக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் எரிசாராயம், மெத்தனால் பயன்பாட்டை கவனிக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil