தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை திருச்சிக்கு வருகை தருகிறார். திருச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, அவரது பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, திருச்சி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜூலை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை திருச்சியின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக முதலமைச்சர் பயணம் செய்யும் வழித்தடங்களிலும், ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் (UAVs) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி எவரேனும் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா விமானங்களை இயக்குவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் எச்சரித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்