/tamil-ie/media/media_files/uploads/2023/02/Express-Image-6.jpg)
Source: Twitter/@mkstalin
சிறைச்சாலைக்கு புத்தகங்களை வழங்கும் திட்டத்தினால் பெருமிதம் கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். உங்களில் ஒருவன் பதில்களில் தனது கருத்துக்களை பகிரும் முதல்வர், தன்னை பெருமிதம் கொள்ள வைத்த தருணத்தைப் பற்றி விவரித்தார்.
இதைப்பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "சிறை கைதிகள் படிக்குற வகையில், சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தியுள்ளது. இதற்காக, சிறைத்துறைக்கு பலரும் ஆர்வத்துடன் புத்தகங்கள் வழங்கி வருகிறார்கள்.
சிறைத் தனிமையைப் போக்கி, குற்றம் செய்தோரையும் நல்வழிப்படுத்தும் புத்தகங்களைச் சிறைவாசிகளுக்கு வழங்கிய பெரியவர் பாலகிருஷ்ணன் போன்றோர் நம் உறவுகளில் பெருக வேண்டும்! #UngalilOruvanAnswershttps://t.co/GeXy27UGXb
— M.K.Stalin (@mkstalin) February 14, 2023
ராமநாதபுரத்தை சேர்ந்த பெரியவர், பாலகிருஷ்ணன் (வயது 92), தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும் சிறைத் துறைக்கு வழங்கியிருக்கிறார். தான் வாழ்நாளில் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியில் சிறைக் கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கக்கூடிய அவருடைய முடிவு மிகவும் பாராட்டத்தக்கது. இந்த செய்தியை கேட்டு நெகிழ்ந்து போனேன். இதை பலரும் பின்பற்ற வேண்டும்.
மிசாவில் அரசியல் கைதியாக நான் இருந்தபோது, நிறைய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அரசியல், வரலாற்று புத்தகங்களைத் தாண்டி நிறைய நாவல்களையும் படித்தேன். சிறைச்சாலையின் தனிமையை போக்க நல்லநண்பர் புத்தகங்கள் தான்", என்று கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.