scorecardresearch

இன்று முதல் 9 நாட்கள்: ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் பயணம்; தொழில் நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக இன்று முதல் 9 நாட்கள் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார்.

mk stalin

வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு. சமீபத்தில் துபாய் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த துபாய் பயணத்தின் மூலமாக ரூ.6,100 கோடி முதலீடும், 15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று(மே 23) சிங்கப்பூர் செல்ல முடிவு செய்துள்ளார். அங்கிருந்து ஜப்பான் செல்லும் வகையில் பயண திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தொழில் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். நேற்று முன் தினம் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சிங்கப்பூர் சென்றுள்ளார்.

சிங்கப்பூர் பயணத்தில அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகம் மற்றும் டெமாசெக், செம்கார்ப், கேபிடல் லாண்ட் இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓக்களை சந்தித்து ஸ்டாலின் பேசுகிறார்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க இன்று காலை 11.25க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்று,அங்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடனான சந்திப்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu cm mk stalin visit singapore and japan industrial investments

Best of Express