முதல்வர் பழனிசாமி பிறந்தநாள்: மோடி வாழ்த்து, ட்விட்டரில் ட்ரெண்ட்

Edappai Palanichami : முதல்வர் பழனிசாமியின் பிறந்தநாளை, கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டுவிட்டரில் #HBDEdapadiyaar என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டிங் ஆக்கி...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று ( மே 12ம் தேதி), தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல்வர் பழனிசாமிக்கு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

முதல்வர் பழனிசாமியின் பிறந்தநாளை, கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டுவிட்டரில் #HBDEdapadiyaar என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

பிரதமர் மோடி : நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவையில் பணியாற்ற வாழ்த்துக்கள் என்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி : தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

துணை முதல்வர் பன்னீர்செல்வம் : இன்று பிறந்தநாள் நாள் காணும், மாண்புமிகு முதல்வர் அன்பு அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் வேலுமணி : எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக தமிழக மக்களின் துயர் துடைப்பதில் வேகத்தையும், மாண்புமிகு அம்மாவின் அரசை வழிநடத்தி செல்வதில் விவேகத்தையும் கடைபிடித்து நாட்டிற்கே தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக உயர்த்தியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் : இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு நானும், தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்தும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

அதிமுக : எடப்பாடி பெற்றெடுத்த சிற்பி
டெல்டா மீட்பு நாயகன்
காவிரி காப்பாளன்
சரபங்கா நதி மீட்பு நாயகன்
மக்கள் முதல்வர்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
எடப்பாடி கே பழனிச்சாமி ????????
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி கே மணி : பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் பழனிசாமிக்கு எனது வாழ்த்துக்கள்

எஸ் வி சேகர் : தங்களின் பிறந்த நாள் பரிசாக இப்போது பூட்டப்பட்ட மதுக்கடைகளின் சாவிகளை கடலில் எறிந்து விடுங்கள். தமிழகத்தின் அனைத்து தாய்மார்களின் ஆசிகளும்,ஆதரவும், ஆட்சியும் Flag of Indiaஉங்களுக்கே…

நடிகர் சிபி சத்யராஜ் : நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close