Tamil Nadu CM Stalin invites Arvind Kejriwal to launch of three educational projects: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழகத்தில் 26 சிறப்புப் பள்ளிகளையும், 15 மாதிரிப் பள்ளிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செவ்வாய்க்கிழமை அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்து, தி.மு.க அரசின் புதுமைப் பெண் திட்டம் தொடக்க விழா மற்றும் தமிழகம் முழுவதும் 26 சிறப்புப் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையும் படியுங்கள்: எந்த விளையாட்டுக்கும் மொழி, கலாச்சார பாகுபாடு கிடையாது- திருச்சியில் கபில்தேவ்
எந்த மாநிலத்தின் கல்வி முறை சிறப்பாக உள்ளது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் கிண்டல் செய்த சில நாட்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்த அழைப்பு வந்துள்ளது.
“அடுத்த வாரம் தமிழ்நாட்டுக்கு வருமாறு என்னை அழைத்த திரு @mkstalinக்கு நன்றி. கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். செப்டம்பர் 5 ஆம் தேதி நாங்கள் 3 முக்கியமான திட்டங்களைத் தொடங்குவோம், ”என்று அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், “டெல்லியைப் போலவே, தமிழக அரசும் இப்போது 26 அதிநவீன SOEகளை (சிறப்பு பள்ளிகள்) அறிமுகப்படுத்துகிறது. மாதிரிப் பள்ளிகளான 15 பள்ளிகள் தொழில்முறை படிப்புகளை வழங்குவதற்காக உயர்த்தப்படுகின்றன,” என்று டெல்லி முதல்வர் கூறினார்.
புதுமை பெண் திட்டத்தின் கீழ், உயர்கல்வி உதவியாக மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தமிழக அரசு வழங்கும் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் ட்வீட் செய்ததாவது, “இன்று (30.08.2022), மாண்புமிகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படியும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையிலும் நான் சந்தித்தேன், "புதுமைப் பெண் திட்டம்", "26 ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்" மற்றும் "15 மாதிரிப் பள்ளிகள்" ஆகியவற்றைத் தொடங்குவதற்காக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடக்க நிகழ்வில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்தேன்.”
ஏப்ரல் மாதம் ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்றார்.
புதுமையான பிசினஸ் பிளாஸ்டர்ஸ் திட்டத்தை கண்டு மகிழ்வதாக ஸ்டாலின் கூறினார். “தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களைத் தாண்டி உங்கள் அறிவையும் திறமையையும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உலகம் ஜன்னல்களுக்கு வெளியே உள்ளது. உங்கள் திறமையால் அதை புதுமைப்படுத்துங்கள்! அதை வளப்படுத்துங்கள்!” என்று ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.