Advertisment

முதல்வர் ஸ்டாலினுக்கு "அம்பேத்கர் சுடர்" விருது : தனது படத்தை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி

Tamilnadu News Update : முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
முதல்வர் ஸ்டாலினுக்கு "அம்பேத்கர் சுடர்" விருது : தனது படத்தை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி

Tamilnadu CM Stalin Ambedkar Sudar Award : சென்னை வேப்பேரியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள கட்சியின் விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.

Advertisment

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல. திருமாவளவன் இந்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். இதனையடுத்து விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது.

இந்த விழாவில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் சேர்தது இந்தியாவின் சட்டமேதை அம்பேத்கர் அவர் கையால் எழுதிய இந்திய அரசியல் சாசனம் வழங்கப்பட்டது. அதனைத் தொடாந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது. மேலும் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் கதிர் விருதும், பி.வி.காரியமாலுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும், காயிதே மில்லத் பிறை விருது பஷீர் அகமதுவுக்கும் ராமசாமி என்பவருக்கு செம்மொழி ஞாயிறு விருதும்  வழங்கப்பட்டது.

விருதுபெறும் அனைவரின் பின்புலம் காணொலி வடிவில் மேடையில் திரையிடப்படடது. இந்த காணொலியில் விருதுபெறுபவர்கள் வளர்ந்து வந்த விதம், அரர்களின் அரசியல் மற்றும் சமூகத்தில் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கு விருது வழங்கப்பட்டது.

இதில் அம்பேத்கர் சுடர் விருது பெற்ற முதல்வர் ஸ்டாலின் இந்த விருது பெற்றது குறித்து பேசுகையில், அம்பேத்கர் சுடர் விருதை திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அர்ப்பணிக்கிறேன். பெரியார் திடலில வைத்து அம்பேத்கர் விருதை வாங்குவதை விட வேறு என்ன பெருமை இருக்க முடியும். எனக்கு இந்த விருது மிகவும் ஊக்கமளிக்கிறது.

கலைஞரின் கதை வசனத்தில் உருவான ஒரே ரத்தம் படத்தில் நகரத்தில் படித்துவிட்டு மீண்டும் கிராமத்திற்கு வந்து சீர்திருத்தங்கள் செய்ம் நந்தகுமார் என்ற இளைஞராக நடித்திருப்பேன் அப்படத்தில் பண்னையாரின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒருவனாக நடித்திருப்பேன் இநத படத்தில் இறுதியாக நான் தாக்கப்படும்போது ஒரு போராளியின் பயணம் இது அவன் போராடி பெற்ற பரிசு இது என்ற பாடல் வரும். அதை எழுதியது கலைஞர்தான் இந்த விருது பெறுமை சமயத்தில் அந்த பாடலை நினைத்துப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment