Advertisment

இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் முதல்வர் : வைரலாகும் ஜிம் ஒர்க்- அவுட் வீடியோ

Tamilnadu Cm News : எந்த உடற்பயிற்சி செய்தாலும், அதற்குரிய உடையுடன் இருக்கும் முதல்வர் கொரோனா தொற்று காலத்தில் கூடுதல் பாதுகாப்புடன் முககவசம் அணிந்த படி மக்களை சந்தித்து வருகிறார்

author-image
WebDesk
New Update
இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் முதல்வர் : வைரலாகும் ஜிம் ஒர்க்- அவுட் வீடியோ

Tamilnadu CM Workout Video : இளைஞர்களுக்கு ஆதரவாக மட்டுமல்ல அவர்களுக்கு டஃப் கொடுக்கவும் தயங்க மாட்டேன் என்பதை நிரூபிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

10 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுகவில் முதல்வர் ஸ்டாலின், கொரோனா தொற்று, மற்றும் மக்கள் பிரச்சினையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாலும், இடையில் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அக்கறைக்காட்டவும் தயங்குவதில்லை. தற்போது 60 வயதை கடந்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்றவுளம் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் தனது உடலை பராமரித்து வருகிறார்.

அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினாலும், தினமும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளில் பிஸியாக இருந்தாலும் காலையில் எழுந்து வாக்கிங், ஜாக்கிங், செய்துகொண்டு வருகிறார். பிரச்சாரம் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்காக வெளியூர் சென்றாலும், முதல்வரின் உடற்பயிற்சியை அந்த ஊர் மக்கள் பார்க்க முடியும்.

முதல் வாக்கிங் ஜாக்கிங் என்று இருந்த முதல்வர் தற்போது சைக்கிளிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். எந்த உடற்பயிற்சி செய்தாலும், அதற்குரிய உடையுடன் காட்சியளிக்கும் அவர், கொரோனா தொற்று காலத்தில் கூடுதல் பாதுகாப்புடன் முககவசம் அணிந்த படி மக்களை சந்தித்து வருகிறார். மேலும் தனது உடற்பயிற்சியிலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் முககவசம் அணிந்து வருகிறார்.

மேலும் இவரது உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒரு நிகழ்வாக உள்ளது. அந்த வகையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி தொடர்பான வீடியோ பதிவு இணைத்தை அதகளம் செய்து வருகிறது. தனது வீட்டிலேயே ஜிம் உபகரணங்களை வைத்துள்ள முதல்வர்,  காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டே டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை கண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், 70 வயதை நெருங்கினாலும் என்றும் இளமை இவருக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை போல தனது உடலை பராமரிக்கும் உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ள இந்த வீடியோ பதிவு அவர்களுக்கே கடும் சவால் அளிக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment