மதுரை அருகே உள்ள சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள தொல்லியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகம் 31,000 சதுர அடியில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.18.43 கோடி என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் மாநில தொல்லியல் துறை 2018 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் கிமு 6 ஆம் நூற்றாண்டில் வைகை ஆற்றின் கரையில் செழித்து வளர்ந்த நகர்ப்புற நாகரிகத்தைக் குறிக்கும் பல கண்டுபிடிப்புகள் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து வெளியான அறிக்கையில், “அறிவியல் ரீதியாக தமிழ் சமூகம் கல்வியறிவு மற்றும் கல்வியறிவு பெற்ற சமூகம் என்பது அந்த காலகட்டத்திலேயே நிரூபிக்கப்பட்டு உள்ளது” என இதுவரை அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழர்களின் வரலாறு, அவர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.
மண் பாண்டங்கள் மற்றும் செங்கல் கட்டமைப்புகள் உள்ளிட்டவை இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, அனிமேஷன், விர்ச்சுவல் ரியாலிட்டி கண்காட்சி ஆகியவை அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற அம்சங்களாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/