Tamilnadu CM Stalin Dubai Trip Update In Tamil : துபாயில் நடைபெற்று வரும் துபாய் எக்ஸ்பொ 2022 கட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் தூபாய் புறப்பட்டு சென்றார். முதல்வராக பதவயேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். முன்னதாக இந்த பயணம் வெற்றிகரமாக முடியவேண்டும் என்று சட்டமன்ற கட்சி தலைவர்கள் பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நம்பர் ஒன் முதல்வர் என்ற பெருமை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்வது தான் எனக்கும் இன்னும் மகிழ்ச்சி அதற்காக வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகிறோம். அதற்காக இந்த துபாய் மற்றும் அபுதாபி பயணங்கள் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று முதல்வர் கூறினார்.
இந்நிலையில் துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு வர்த்தகம், முன்னணி தொழில்துறைகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல துறைகளின் அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
துபாய் எக்ஸ்போ 2022 தொழிற்கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கு, தொழில்கள், மருத்துவம், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழில் பூங்காக்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் மாநிலத்தின் திறமையை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் "மோட்டார் வாகனங்கள், மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் காற்றாலைகள் உட்பட பல துறைகளின் அம்சங்களை இந்த அரங்கு காண்பிக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் துபாயில் புலம்பெயர் தமிழர்களை சந்திக்க உள்ளார்.
கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த துபாய் எக்ஸ்போ 2022 தொழிற்கண்காட்சி, ஆறு மாத காலம் நடைபெற உள்ளது. இதில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. எக்ஸ்போ 2.5 கோடி பார்வையாளர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.