காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/27797cbf-43c.jpg)
காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 12 கோடி செலவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் 'வளர் தமிழ் நூலகம்' ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/4e1fd9c5-422.jpg)
பின்னர், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் உருவச் சிலையையும் திறந்துவைத்தார். இது குறித்த விவரம் வருமாறு;
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக காரைக்குடிக்கு வந்த முதல்வர், அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த நிதியில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார்.
/indian-express-tamil/media/post_attachments/935bdfe6-915.jpg)
இதனைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் அரங்கில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, ஆலோசனை நடத்தவுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/c3b5de71-542.jpg)
நாளை (புதன்கிழமை) சிவகங்கையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர், சிவகங்கை மன்னர் அரசுக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் பங்கேற்று, சுமார் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/600646cb-fbb.jpg)
முன்னதாக, சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், அரசு அதிகாரிகள் மற்றும் திரளான தி.மு.க.,வினரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
க.சண்முகவடிவேல்