நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு NEET தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இந்தநிலையில், செப்டம்பர் 20, 2023 புதன்கிழமை, NEET PG 2023க்கான தகுதி சதவீதத்திற்கான கட்-ஆஃப் அனைத்து பிரிவினருக்கும் "பூஜ்ஜியமாக" குறைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (NMC) மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், நீட் தேர்வின் பலன் ஜீரோ (ZERO) என்பதை மத்திய பா.ஜ.க அரசு ஏற்றுக்கொண்டுள்ளது!
NEET PG கட்-ஆஃப்-ஐ பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய 'தகுதி' மற்றும் நுழைவுத் தேர்வில் 'தகுதி' என்பது அர்த்தமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது பயிற்சி மையங்களில் சேருங்கள் மற்றும் தேர்வுக்கு பணம் செலுத்துங்கள் போதும் என்றாகிவிட்டது. மேலும் தகுதி தேவையில்லை.
NEET = 0. NEET க்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை.
விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பா.ஜ.க அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. நீட் என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பா.ஜ.க அரசை அகற்றியாக வேண்டும், என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“