Advertisment

ஸ்டாலின் திருவாரூர் வருகை: கலைஞர் கோட்டம் திறப்பு விழா ஏற்பாடுகள் மும்முரம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை; வரும் 20-ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalaignar Kottam

திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று இரவு திருச்சி வருகின்றார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். அங்கே ஓய்வுக்குப் பிறகு நாளை திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார்.

Advertisment

  பின்னர் திருவாரூர் மாவட்டம், காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் தலைமையேற்கிறார்.

இதையும் படியுங்கள்: விரைவில் திருச்சியில் ஸ்டாலின் கள ஆய்வு: அமைச்சர் நேரு தகவல்

   கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். அதேபோல, முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

   இந்த கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

   இந்த திறப்பு விழாவிற்கு முன்னதாக வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளன. மேலும் இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  முதல்வர் இன்று திருச்சி வருகையை முன்னிட்டு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பினை கொடுக்க அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் தயாராகியிருக்கின்றனர். சாலை மார்க்கமாக முதல்வர் திருவாரூர் செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல ஐ.ஜி, மாநகர காவல் ஆணையர் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Stalin Trichy Thiruvarur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment