பீகார் நிலைமை தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது – ஸ்டாலின்

பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது; தி.மு.க எம்.பி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது; தி.மு.க எம்.பி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

author-image
WebDesk
New Update
stalin nr elango

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவாசான் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை நான் திறந்துவைக்க உள்ளேன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் நடைபெற்ற தி.மு.க எம்.பி. என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; ”கலைஞர் மீதும், தி.மு.க மீதும், என் மீதும் பற்று கொண்டவர் என்.ஆர்.இளங்கோ. என்.ஆர்.இளங்கோ அரசு வழக்கறிஞராக பணியாற்ற வாய்ப்பு தந்தவர் கலைஞர். தேர்தல் காலத்தில் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் வைத்திருப்பார் என்.ஆர்.இளங்கோ.

பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சகோதரர் ராகுல்காந்தி பேரணி மேற்கொண்டிருக்கிறார். பீகாரின் நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது. அதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் என்.ஆர் இளங்கோ மேற்கொண்டு வருகிறார். பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது.

Advertisment
Advertisements

நாளை முதல் ஒரு வார காலம் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்கிறேன். அங்கு நடைபெறவுள்ள ஒரு முக்கியமான நிகழ்வை இப்போது அறிவிக்க விரும்புகிறேன். எனது வெளிநாட்டு பயண திட்டம் குறித்து நாளை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விளக்குகிறேன். தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். வெளிநாடு பயணங்களின்போது தமிழகத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டுவதை பார்த்துள்ளேன்.

உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்திருக்கக்கூடிய அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவாசான் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை நான் திறந்துவைக்க உள்ளேன். அதை எண்ணிப் பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறேன்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி, எழுதியிருந்தாலும் அவருடைய சிந்தனைகள் உலகத்தில் அனைவருக்கும் பொதுவானது. அவர் வலியுறுத்திய சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, ஏற்றத்தாழ்வின்மை, அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. அப்படிப்பட்ட அறிவு மேதை உலக அளவில் அங்கீகரிக்கப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை.” இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

Tamil Nadu Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: