தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று இரவு விமான மூலம் திருச்சி வருகிறார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று இரவு 7.30 மணி அளவில் விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் தி.மு.க.,வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாகை செல்கிறார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஓய்வு எடுக்கும் ஸ்டாலின், நாளை காலை புத்தூர் அருகே தி.மு.க நிர்வாகியின் இல்ல திருமணத்தில் பங்கேறகிறார். பின்னர் பால்பண்ணைச் சேரியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஐ.டி.ஐ வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தமிழக முதல்வர் சாலை மார்க்கமாக திருவாரூர் மாவட்டம் கடந்து நாகை செல்வதை முன்னிட்டு, திருவாரூர், நாகை மாவட்டங்களில் முக்கிய விருந்தினர்கள் செல்லும் வழித்தடத்தை சிவப்பு மண்டலமாக அறிவித்து, அந்த வழித்தடத்தில் சிவில் ரிமோட் பைலட் விமான அமைப்பு மற்றும் டிரோன் கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
க.சண்முகவடிவேல்