Advertisment

கலைஞர் நினைவு மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு ரெடி: ஜனாதிபதியை அழைக்க ஸ்டாலின் பயணம்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி மருத்துவமனை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin

Tamil News Updates

சென்னையில் உள்ள தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மைய (கிங் இன்ஸ்டிடியூட்) வளாகத்தில் கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

Advertisment

இந்த புதிய மருத்துவமனையின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு அழைப்பு விடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை டெல்லி செல்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி மருத்துவமனை திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1,000 படுக்கைகள் கொண்டு கட்டப்படும் இந்த மருத்துவமனைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

"கட்டுமானம் நவம்பர் அல்லது டிசம்பரில் முடிக்கப்பட வேண்டும், ஆனால் முதல்வர் அவ்வப்போது வந்து பார்வையிட்டதன் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இந்த மருத்துவமனை 1967-ல் கலைஞர் (கருணாநிதி) போட்டியிட்டுச் சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார், பின்னர் எங்கள் தலைவர் சி.என்.அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு முதல்வரானார்", என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

2021 ஆம் ஆண்டு மு.கருணாநிதி பிறந்தநாளின் போது ஸ்டாலின் புதிய மருத்துவமனையைப் பற்றின தகவலை அறிவித்தார். இந்த திட்டத்திற்கு ரூ.230 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, நிர்வாக மற்றும் நிதித் தடைகளும் வழங்கப்பட்டன.

பொதுப்பணித்துறை மூலம் கடந்த ஆண்டு ஏப்ரலில் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. கடந்த வாரம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கொள்கை குறிப்பில், செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment