முன்னள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு தலைநகர் டெல்லியில் கார் ஓட்டிய குமாரசாமி என்பவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Weight Loss: ஆளையே மாற்றும் இந்த சூப்… சிம்பிளான செய்முறை இங்கே!
சேலம் மாவட்டம், வாழப்பாடி, குறிச்சி ஊராட்சி, அணைமேட்டைச் சேர்ந்தவர் குமாரசாமி, வயது 64. இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், கார் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு, மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் யுவராஜ் (35) டெல்லி மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாக பணி புரிகிறார். இரண்டாவது மகன் மணி (33) டெல்லி தமிழ்நாடு இல்ல கார் டிரைவர். கடைசி மகன் ரவி (31) தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
மறைந்த தமிழக முதல்வர்களான, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், டெல்லியில், பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்களை சந்திக்க செல்லும்போது, அவர்களுக்கு டிரைவராக பணிபுரிந்தார் குமாரசாமி. அங்கு 35 ஆண்டுகளாக பணிபுரிந்த இவர், 2017-ல் ஓய்வு பெற்றார். பின்னர் குடும்பத்துடன் டெல்லியிலேயே வசித்து வந்தார் குமாரசாமி. சொந்த ஊரில் தனது 90 வயது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கடந்த ஜனவரியில், குறிச்சி வந்திருந்தார். அங்கு தாய்க்கு துணையாக இருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 29-ம் தேதி வெளியே சென்ற குமாரசாமி வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடினர்.
வீட்ல பிரட் இருக்கா? இப்படி செஞ்சி கொடுங்க, பசங்க ஆசையா சாப்பிடுவாங்க!
பின்னர் தலையில் காயங்களுடன் கிணற்றில் சடலமாக குமாரசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்ட வாழப்பாடி போலீஸார், அவர் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”