நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கோவை மண்டலத்துக்குட்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளை கேரளாவிற்கு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கல்லூரி கல்விதுறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் பலியானார். இதனை தொடர்ந்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப் படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் தங்கள் கல்லூரி மாணவர்களை கேரளாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி அனைத்து கல்லூரிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“