ணி காரணமாக வெளியூரில் உள்ள மக்கள் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊருக்கு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது பொங்கல் பணடிகையை முன்னிட்டு பெரும்பாலான மககள் ஊர் திரும்பியுள்ள நிலையில் பல இடங்களில் டு வீலர் ஸ்டேண்ட் நிரம்பி வழிகிறது.
பொங்க ல் பண்டிகை முன்னிட்டு கோவையிலிருந்து சொந்த ஊருக்கு ரயில், பஸ் வழியாக செல்லும் பயணிகள் தங்களது டுவீலர்களை பார்கிங் ஸ்டேண்டுகளில் நிறுத்தி சென்றதால் கோவையில் உள்ள பெரும்பாலான ஸ்டேண்டுகளில் வாகனங்கள் நிரம்பி வழிகிறது.
கோவையில் மாநகரில் 300 க்குமேல் டுவீலர் பார்கிங் உள்ளது. திருவிழா சென்று திரும்பி வரும் வரை வாகனங்கள் பாதுப்பாக இருக்கும் இருபத்தி நாலு மணிநேர சிசிடிவி கண்காணிப்பில் இருப்பதால் வாகன திருட்டு தடுக்கப்படுகிறது எனவும், வாடகை என்பதை விட பாதுகாப்பு என்பதை உறுதி செய்கிறோம் மேலும் இதனால் டுவீலர் திருட்டு திருவிழா காலங்களில் குறைந்தே காணப்படும் என டூவீலர் பார்க்கிங் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.