தமிழ்நாடு வணிக வரித்துறையில் துணை ஆணையராகப் பணிபுரிந்து வந்த செந்தில் வேல் உடல் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை போரூரில் வசித்து வந்த செந்தில் வேல், செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு வணிக வரித்துறையில் துணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தார். செந்தில்வேலை காணவில்லை என உறவினர்கள் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில் வேல் உடல் சென்னை போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணி வரித்துறை துணை ஆணையர் செந்தில் வேல் மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள போலீசார், செந்தில் வேல் தற்கொலை செய்து கொண்டாரா, பணி சுமையா அல்லது கடன் பிரச்சினையா, அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில் வேலின் உடல் உடற்கூறாய்விற்காக அனுப்பிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகே, செந்தில் வேலின் மரணத்துக்கு காரணம் என்ன என்பது தெரியவரும்.
(தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“